தெற்காசிய கால்பந்தாட்ட சாம்பியன்ஷிப் 2023 பட்டத்தை வென்ற இந்திய கால்பந்தாட்ட அணியில் இடம்பெற்ற, தமிழ்நாட்டு வீரர் நந்தகுமார் அவர்களை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்.. நந்தக்குமார், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டுக்கு மேலும் பெருமை சேர்க்கட்டும். அவருக்கு தமிழ்நாட்டு விளையாட்டு துறை துணை நிற்கும் என்று கூறினார்.



