“அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குஷ்பு பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே?” என்றதற்கு,
“அதைப்பற்றி எனக்குத் தெரியாது, வீரபாண்டிய கட்டபொம்மனுக்காக இப்போது வந்திருக்கிறேன். அதைப்பற்றி சொல்ல முடியாது” என்றார்.
“தமிழ்நாடில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்கிறார்களே, இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று சொல்லுங்கள்…?”
“ஏன் நீங்களெல்லாம் நல்லாத்தானே இருக்கீங்க.” என்றார்.

“இப்போதைய சூழலில் இளைஞர்கள், பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்கிறீர்கள்?”
“இளைஞர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் மாதிரி வீரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும், பெண்களை பெற்றோர்கள்தான் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். எல்லாமே அரசாங்கம் செய்ய முடியாது. ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்புக்கும் போலீஸ் போட்டால், போலீசால் அந்த வேலையை மட்டும்தான் பார்க்க வேண்டி வரும். பெற்றோருக்குத்தான் பொறுப்பு உள்ளது, என்னையும்தான் பெற்றோர்கள் கட்டுப்பாடாக வளர்த்தார்கள். அதனால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிள்ளைகளை கடுப்பாடாக வளர்க்க வேண்டும். ஒழுக்கத்தைக் கற்றுக்கொள்ளத்தன் கல்லூரிக்கும் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புகிறோம்” என்றார்.
