இந்த நிகழ்ச்சியில் பெட்ரோல் குறித்துப் பேசிய நிதின் கட்கரி, “விவசாயிகள் உணவு உற்பத்தியாளர்களாக மட்டுமல்லாமல், ஆற்றல் உற்பத்தியாளர்களாகவும் வருவார்கள் என்ற எண்ணத்தில்தான் இந்த அரசு இயங்கிக்கொண்டிருக்கிறது. இன்றைய நாள்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் எத்தனாலினால் வாகனங்கள் ஓடும் நிலை உருவாகியிருக்கிறது. ஒருவேளை, நாட்டில் 60 சதவிகித வாகனங்கள் எத்தனாலினாலும், 40 சதவிகித வாகனங்கள் மின்சாரத்தாலும் இயங்கினால், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.15-க்கு கிடைக்கும். இதனால் மக்களும் பயனடைவார்கள்” என்று கூறினார்.

