இந்த ஆட்சியில் தான் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. பெண்கள் வெளியே வருகிறார்கள். மகாத்மா காந்தி நடு இரவில் ஒரு பெண் தங்க நகைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக நடமாடி சென்று பத்திரமாக வீடு திரும்பிகின்ற பொழுது தான் உண்மையான சுதந்திரம் என்று தெரிவித்திருந்தார். அது, இந்தியாவிலேயே கடைப்பிடிக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தான் இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சென்று பார்த்துவிட்டு வரட்டும். அங்கு பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது… இரவு 10 மணிக்கு மேல் நடமாட முடிகிறதா என்று. நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்லுகின்ற விஜய்க்கு இதைத்தான் பதிலாக சொல்கின்றோம்.

தயவுசெய்து வெளியே சென்று பாருங்கள். பக்கத்து மாநிலம் பீகாரில் சென்று பாருங்கள். ஒரிசாவில் சென்று பார்த்துவிட்டு வாருங்கள். வேறு மாநிலத்திற்கு சென்று பாருங்கள். அங்கே எல்லாம் பார்த்துவிட்டு வந்து இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று நிரூபிக்கின்றோம். இல்லையென்றால் நீங்கள் என்ன சொன்னாலும் மக்கள் எங்களை நம்புவார்கள். மக்கள் மத்தியில் நாங்கள் விளக்குவோம்.
யார் அந்த சார் என்பது அந்த சாருக்கு தான் தெரியும். யார் அந்த சார் என்பது விசாரணையில் தெரியவரும். நாங்கள் இல்லை… அந்த சார் எல்லாம். அரசு விதிகளுக்கு உட்பட்டதால் அரசு அதிகாரிகள் பேட்டி கொடுக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அதிகாரிகள் அவசரப்பட்டார்களா என்பதை ஐ.பி.எஸ் படித்த மூன்று பெண் துணை ஆணையர்களை நீதிமன்றம் நியமித்துள்ளது. அந்தக் குழு விசாரித்து உண்மையை வெளிக்கொண்டுவரும்.
எங்கடா காலையில் பிணம் விழும் என்று பிணம் கொத்தி கழுகு என்று சொல்வதை போல எந்த பிணமாவது விழுந்தால் அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடலாமா என்று பார்க்கின்ற பரிதாபகரமான நிலையில் லண்டன் சென்று படித்துவிட்டு வந்திருக்கின்ற பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையின் நிலைமை இருக்கிறது” என்றார்.
