பிரேத பரிசோதனை முடிந்து ஆம்புலன்ஸில் கொண்டுவரப்பட்ட உடலைக் கிராமத்தின் நுழைவு வாயிலான ஆலமரத்துப் பகுதியில் மறித்து, சில நியாயமான கோரிக்கைகளையும் கிராம மக்கள் வலியுறுத்தியிருக்கின்றனர்.
அதாவது, “வன விலங்குகள் மற்றும் மனித மோதல்களை தடுக்க வேண்டும். வனப்பகுதியையொட்டி கிராமங்களில் சோலார் வசதி மூலமாக மின்வேலி அமைக்க வேண்டும்.


முறையான மின்சார வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். குறிப்பாக, எங்களின் நீண்ட கால கோரிக்கையான சாலை வசதியை விரைவாக செய்து தர வேண்டும். தற்போது உயிரிழந்த பட்டதாரி இளம்பெண், கழிவறை வசதி இல்லாத ஒரே காரணத்தினால்தான் அருகிலுள்ள மறைவான பகுதிக்குச் செல்ல நேர்ந்தது. எனவே, இங்கு வசிக்கும் அனைவரின் வீடுகளிலும் கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்று கண்ணீர் மல்க வலியுறுத்திருக்கின்றனர்.
