Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கார் மீது விழுந்த கான்கிரீட் – திறப்பதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய கோவை அவிநாசி சாலை மேம்பாலம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 5, 2024
in அரசியல் செய்திகள்
0
கார் மீது விழுந்த கான்கிரீட் – திறப்பதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கிய கோவை அவிநாசி சாலை மேம்பாலம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கோவை மாவட்டத்தில் ஏராளமான மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு கட்டி திறக்கப்பட்ட காந்திபுரம், திருச்சி சாலை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை மேம்பாலங்கள் முறையாக கட்டப்படவில்லை என்ற புகார் எழுந்தது.

கோவை உக்கடம் மேம்பாலம்

உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே சமீபத்தில் திறக்கப்பட்ட மேம்பாலத்தின் சிமென்ட் கலவை கடந்த வாரம் சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை அவிநாசி சாலையில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.10  கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பாலம் நீலாம்பூர் வரை மேலும் 5 கி.மீ தொலைவுக்கு நீட்டிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவிநாசி சாலை மேம்பாலம் பணிகள்

ஏற்கெனவே கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் ஹோப்ஸ் காலேஜ் சந்திப்பு அருகே, நேற்று முன்தினம் திடீரென மேம்பால கட்டுமானத்தின் கான்கிரீட் பெயர்ந்து அந்த வழியாக சென்று  கார் மீது விழுந்தது.

இதில் காரின் கண்ணாடி மற்றும் முன்புற பகுதி சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பாக பீளமேடு காவல்துறையில் எந்த புகாரும்  அளிக்கப்படவில்லை.

அவிநாசி சாலை மேம்பாலம்

இந்த சம்பவம் கோவை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேம்பாலம் கட்டுமானப் பணிகளை பாதுகாப்புடனும், கவனமுடனும் மேற்கொள்ள  பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/Neerathikaaram



.

Previous Post

`சிறுபான்மையினர் நிலை குறித்து கவலை தெரிவித்தேன்; ஆனால் மோடி..’- ஏஞ்சலா மெர்க்கல் எழுதியிருப்பதென்ன? | Followed attacks on minorities in India with concern, broached issue with Modi says Angela Merkel

Next Post

சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் மீண்டும் உயா்வு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் மீண்டும் உயா்வு

சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கான கட்டணம் மீண்டும் உயா்வு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In