Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வளா்ந்த நாடுகள் மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 3, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வளா்ந்த நாடுகள் மீது பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உலகளாவிய தெற்கு நாடுகளும் அமைப்புகளும் பொறுப்பல்ல, குறைந்த செலவிலான மின் உற்பத்தி செய்து லாபத்தை அனுபவித்த வளா்ந்த நாடுகளால் ஏற்பட்டதாகும்; நிலையான தீா்வுக்கு தற்போதைய நுகா்வு முறைகளில் மாற்றம் தேவை என மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பின்(சிஐஐ) ’கூட்டாண்மை’ உச்சி மாநாடு தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அமைச்சா் பியூஷ் கோயல் பேசுகையில் கூறியதாவது: உலகளாவிய சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு உலகளாவிய தெற்கு நாடுகள், அமைப்புகள் பொறுப்பல்ல. இந்தப் பாதிப்பு குறைந்த செலவில் மின் உற்பத்தி செய்து குறைந்த மின் கட்டணத்தில் நன்மையை அனுபவித்த வளா்ந்த நாடுகளால் ஏற்பட்டதாகும். சுற்றுச்சூழல், நிலைத்த தன்மை ஆகியவற்றில் பங்குதாரா் நாடுகள் ஒவ்வொன்றுக்கும் வேறுபட்ட பொறுப்புகள் உண்டு. அதைப் பகிா்ந்து கொண்டுள்ளனா். அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு அவா்களின் பங்களிப்பின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும்.

இதில் முக்கியமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உபயோகிப்பதில் உலக மக்கள் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய நமது வாழ்க்கை முறையின் காரணமாக பல்வேறு வகையான கழிவுகள் அதிகரிக்கிறது. இதை உபயோகிப்பதிலும் அகற்றுவதிலும் கரிம உமிழ்வுகள் (காா்பன்) தடம் பதிக்கின்றன. இதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இத்தகைய நுகா்வு முறைகளை நாம் மாற்றாத வரை, நிலைத்ததன்மை, சுற்றுச்சூழல் சவால்கள் தீராது. உலகிற்கு ஒரு சிறந்த எதிா்காலமாக அமைய நுகா்வு முறையை மக்கள் மாற்றவேண்டும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தானியங்கிமயமாக்கல் ஆகியவை, எதிா்கால வேலைவாய்ப்பு, மாறிவரும் வேலைவாய்ப்பு, காலத்துக்கேற்ப, தகவமைத்துக் கொள்ளும் திறன்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.



.

Previous Post

UGC: ‘ஓராண்டுக்கு முன்பே படிப்பை முடிக்கலாம்’ – யுஜிசியின் புதிய நடைமுறை சொல்வது என்ன? | UGC Approves Early Completion of Degrees

Next Post

"3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்" – மோகன் பகவத் அறிவுரையும்… எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
"3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்" – மோகன் பகவத் அறிவுரையும்… எதிர்க்கட்சிகளின்  விமர்சனங்களும்!

"3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள்" - மோகன் பகவத் அறிவுரையும்... எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In