Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: `எதிர்க்கட்சிகள் இதை செய்தாக வேண்டும்…!' – திருமாவளவன் சொல்வதென்ன?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 24, 2024
in அரசியல் செய்திகள்
0
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: `எதிர்க்கட்சிகள் இதை செய்தாக வேண்டும்…!' – திருமாவளவன் சொல்வதென்ன?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடந்து முடிந்த மகாராஷ்டிரா தேர்தலில் பெரும்பான்மை இடங்களை வென்று மகா விகாஷ் கூட்டணி ஆட்சி அமைக்கும் அதே நேரம், எதிர்க்கட்சி கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்திருக்கிறது. இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி-யுமான தொல். திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில், “கேரளாவிலுள்ள வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள பிரியங்கா காந்திக்கும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள ஹேமந்த் சோரனுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மகாராஷ்டிரா `இந்தியா’ கூட்டணி கூட்டம்

வயநாடு இடைத்தேர்தலில் ராகுல் காந்தி பெற்றதை விடக் கூடுதலாக வாக்குகள் பெற்று மகத்தான வெற்றியை பிரியங்கா காந்தி ஈட்டியுள்ளார். நாடாளுமன்ற மக்களவைக்கு அவர் வரப்போவது இந்தியா கூட்டணிக்கு மேலும் வலிமையைத் தரும். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக இருந்த ஹேமந்த் சோரன் மீது பொய் வழக்குகளைப் போட்டு, ஒன்றிய பா.ஜ.க அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. குறுக்கு வழியில் அவரது முதலமைச்சர் பதவியைப் பறித்தது. இந்தச் சதிகளையெல்லாம் தாண்டி மக்கள் ஆதரவோடு ஹேமந்த் சோரன் மீண்டும் ஆட்சி அமைத்திருக்கிறார். பழங்குடி மக்களின் மகத்தான தலைவரான ஹேமந்த் சோரனுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமித் ஷா, மோடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் தலித் வாக்குகள் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. தலித் வாக்குகள் இந்தியா கூட்டணிக்குச் செல்லாமல் சிதறடிக்கும் விதமாக எல்லா தொகுதிகளிலும் செல்வி மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வி.பி.ஏ கூட்டணியும் வேட்பாளர்களை நிறுத்தின. பா.ஜ.க கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டையும் எதிர்ப்பதாக அவர்கள் சொல்லிக் கொண்டாலும் “பா.ஜ.க-வுக்கு ஆதரவாகத் தலித் வாக்குகளைப் பிரிப்பதற்குத் தான் அவர்கள் வேட்பாளர்களை நிறுத்தினார்கள்” என்னும் விமர்சனம் பரவலாக உள்ளது.

இது அறிந்தோ அறியாமலோ பா.ஜ.க வுக்குத் துணைபோகும் அவலம் ஏற்பட்டுள்ளது. ”மகாராஷ்டிராவில் பா.ஜ.க-வே எதிர்பாராத ஒரு வெற்றியை அது பெற்றுள்ளது. இந்த வெற்றி மோடி -அமித் ஷா- அதானி கூட்டணிக்குக் கிடைத்த வெற்றி” என உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராவத் கூறியிருப்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஏனெனில், அங்கு நாண்டேட் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். ஆனால், அந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளையும் பா.ஜ.க வென்றுள்ளது.

`இந்தியா’ கூட்டணி

இது ‘மகராஷ்டிராவில் முறைகேடான விதத்தில்தான் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றுள்ளது’ என்ற குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கிறது. இதைப் பற்றித் தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், இம்முடிவு பா.ஜ.கவுக்கு எதிரான வாக்குகளைச் சிதறவிடாமல், குறிப்பாக, தலித் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையை எதிர்க்கட்சிகளுக்கு உணர்த்துகிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Modi: `காங்கிரஸால் இனி தனித்து ஆட்சியமைக்க முடியாது… அது ஒட்டுண்ணிக் கட்சி’ – பிரதமர் மோடி காட்டம்

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/TATAStoryepi01



.

Previous Post

எம்.பி. சு. வெங்கேடசனை விமர்சித்த பாஜக செயலர்!

Next Post

40,000 திரைகளில் மகாராஜா!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
40,000 திரைகளில் மகாராஜா!

40,000 திரைகளில் மகாராஜா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In