Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Junior Vikatan – 24 November 2024 – ஒன் பை டூ: “பா.ஜ.க அல்லாத கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்போம்” என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்து! | discussion about edappadi palanisamy comments about bjp alliance

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 20, 2024
in அரசியல் செய்திகள்
0
Junior Vikatan – 24 November 2024 – ஒன் பை டூ: “பா.ஜ.க அல்லாத கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்போம்” என்ற எடப்பாடி பழனிசாமியின் கருத்து! | discussion about edappadi palanisamy comments about bjp alliance
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


டி.ஜெயக்குமார்டி.ஜெயக்குமார்

டி.ஜெயக்குமார்

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க

“உண்மையை உரக்கச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. ‘பாசிச பா.ஜ.க தொடர்ந்து மக்கள் விரோதச் செயல்களைச் செய்துவருகிறது. எனவே, இனி அந்தக் கட்சியுடன் கூட்டணி வேண்டாம்’ என்று கட்சியில் ஒருமனதாக முடிவெடுத்து ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். பா.ஜ.க கூட்டணி இல்லாமல், ஒரு தேர்தலையும் சந்தித்துவிட்டோம். இனியும் பா.ஜ.க-வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. அவர்களுடன் ஒட்டும் கிடையாது, உறவும் கிடையாது என்பதை மிக அழுத்தமாக மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இருந்தபோதிலும், தி.மு.க போன்ற விஷக்கிருமிகள் இல்லாத ஒன்றை இருப்பதுபோல ஒரு மாய பிம்பத்தைக் கட்டமைக்கப் பார்க்கின்றன. `அ.தி.மு.க கூட்டணிக்கு வருமா…’ என்று பா.ஜ.க வேண்டுமானால் காத்திருக்கலாம். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க அல்லாத, தீய சக்தி தி.மு.க-வை வீழ்த்த நினைக்கும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் கூட்டணிவைத்து அ.தி.மு.க தேர்தலை எதிர்கொள்ளும். 2026-ல் ஆட்சியமைக்கப்போவது அ.தி.மு.க-தான்!”

நாராயணன் திருப்பதிநாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி,மா நில துணைத் தலைவர், பா.ஜ.க

“பா.ஜ.க தலைமை இதுவரை அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும், வேண்டாம் என்று எதையும் சொல்லவில்லை. கூட்டணிக்காக பா.ஜ.க இதுவரை எந்தக் கட்சியிடமும் சென்று நிற்கவும் இல்லை. தற்போதைய சூழலில், தமிழகத்தில் எந்தத் தேர்தலும் வரப்போவதும் இல்லை. எனவே, அ.தி.மு.க-வினர் பேசுவதற்கெல்லாம் பதில் சொல்லி எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தேர்தலுக்கு நீண்ட நாள்கள் இருக்கும்போது, இப்போதே கூட்டணி குறித்துப் பேசுவது சரியாகாது. அதேபோல பா.ஜ.க., எந்தக் கட்சியுடன் கூட்டணி இருக்கிறது, இல்லை என்பதையெல்லாம் எங்களது டெல்லி தலைமைதான் முடிவுசெய்யும். தலைமை சொல்லும் கட்சியுடன் தமிழக பா.ஜ.க இணைந்து 2026 சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்து, மாபெரும் வெற்றிபெறும். அதற்கான முன்னேற்பாடாக மாநிலம் முழுவதும் கட்சியில் அமைப்புரீதியான தேர்தல்களை நடத்தி தமிழக பா.ஜ.க-வை வலுப்படுத்திவருகிறோம். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும்!”



.

Previous Post

மனைவியைப் பிரியும் ஏ.ஆர். ரஹ்மான்! தனியுரிமையை மதிக்குமாறு கோரும் மகன்!

Next Post

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

மகாராஷ்டிர பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In