பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு முன்பாக பயிற்சி ஆட்டங்களில் விளையாடாத இந்தியாவின் முடிவு அதிர்ச்சியளிப்பதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் – கவாஸ்கர் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது. டெஸ்ட் தொடரை வெற்றியுடன் தொடங்குவதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.