Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

40-வது வயதில் நயன்தாரா!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 18, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
40-வது வயதில் நயன்தாரா!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகை நயன்தாரா இன்று தன் 40-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் படங்களில் பிசியாக நடித்து வந்த நயன்தாரா, முதல்முறையாக பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் ரூ.1140 கோடி வசூலித்தது. 

இதைத் தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த இறைவனும் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அன்னபூரணி படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதற்கிடையே, இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு வாடகைத்தாய் மூலம் 2 ஆண் குழந்தைகளுக்கும் தாயாக இருக்கிறார். குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க வேண்டும் என்பதற்காகவே அதிகமான படங்களைத் தேர்ந்தெடுப்பதில்லை.

இதையும் படிக்க: நயன்தாரா திருமணப்படத்தில் நானும் ரௌடிதான் காட்சிகள்!

தற்போது, மண்ணாங்கட்டி மற்றும் ராக்காயி ஆகிய படங்கள் நயன் நடிப்பில் உருவாகி வருகின்றன. இன்று நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பியாண்ட் தி ஃபேரி டேல் (beyond the fairy tale) எனப் பெயரிடப்பட்ட நயன்தாராவின் திருமண ஆவணப்படம் வெளியாகியுள்ளது.

இந்த ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் மேல் குற்றச்சாட்டுகளையும் வைத்திருக்கிறார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இருப்பினும் மனசினக்கரே என்கிற மலையாளப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நயன்தாரா, இன்று தன் தன்னுடைய 40-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதால் ரசிகர்கள் நயன்தாராவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

2005 ஆம் ஆண்டு ஐயா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியானார். தொடர்ந்து, ஏற்றமும் இறக்கமுமாக சென்ற தன் சினிமா வாழ்க்கையில் இன்று தென்னிந்தியளவில் ’லேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படுகிறார்.

சினிமா மட்டுமல்லாது பெண்களுக்கான அலங்கார பொருள்களை விற்கும் நிறுவனம் உள்பட சில தொழில்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.



.

Previous Post

“திராவிடக் கட்சிகள் செய்த நல்ல காரியங்களை புறக்கணித்துவிட முடியாது” – சொல்கிறார் பா.ம.க கே.பாலு | The good things done by the Dravidian parties cannot be ignored – PMK K Balu Interview

Next Post

'மயூரா ஜெயக்குமார் vs கோவை செல்வன்' – விமான நிலையத்தில் மோதிய காங்கிரஸ் கோஷ்டிகள்; நடந்தது என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
'மயூரா ஜெயக்குமார் vs கோவை செல்வன்' – விமான நிலையத்தில் மோதிய காங்கிரஸ் கோஷ்டிகள்; நடந்தது என்ன?

'மயூரா ஜெயக்குமார் vs கோவை செல்வன்' - விமான நிலையத்தில் மோதிய காங்கிரஸ் கோஷ்டிகள்; நடந்தது என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In