பார்டர் – கவாஸ்கர் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக கவனமாக விளையாட வேண்டும் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கும் பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு மிக முக்கியமான தொடர் என்பதால் இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கும், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்துக்கும் இடையேயான போட்டி மிகவும் கடுமையாக இருக்கும். கடந்த 2020-2021 ஆம் ஆண்டு பார்டர் – கவாஸ்கர் தொடரின்போது, அஸ்வின் பந்துவீச்சில் ஸ்டீவ் ஸ்மித் தடுமாறினார்.
