Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

புதுச்சேரி: `ஆயுள் கைதியை ரிலீஸ் செய்யச் சொன்னவர்தான் நமச்சிவாயம்!' – பகீர் கிளப்பும் நாராயணசாமி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 16, 2024
in அரசியல் செய்திகள்
0
புதுச்சேரி: `ஆயுள் கைதியை ரிலீஸ் செய்யச் சொன்னவர்தான் நமச்சிவாயம்!' – பகீர் கிளப்பும் நாராயணசாமி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஜம்மு, காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அதனால் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு, அங்கு மாநில அந்தஸ்து வழங்க முடியாது என கூறி வருகிறது மத்திய அரசு. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்  ஜம்மு, காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தும், 370-வது ஷரத்தும் கொண்டு வரப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்று, பிரதமர் மோடி அரசு பதிலளித்துள்ளது.

புதுச்சேரி அரசு

புதுச்சேரி மக்களின் எண்ணங்களை மத்திய  பா.ஜ.க அரசு புறக்கணிக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது பா.ஜ.க. முதல்வர் ரங்கசாமி, மாநில அந்தஸ்து பெறுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேர்தலுக்காக மக்களை ஏமாற்றி வாக்குகளை வாங்கி, என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவோம். மின்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் நமச்சிவாயம், பிரீபெய்டு திட்டத்தை மாற்றி போஸ்ட்பெய்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மின்துறையை என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க அரசு சீரழித்து வருகிறது.

புதுச்சேரி மின் துறையை தனியாருக்கு தாரை வார்க்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். அதானியிடம் மின்துறையை ஒப்படைக்க கையெழுத்து போட்டு, அனைத்து வேலையும் நடத்தி முடித்து விட்டனர். ஆனால் முதல்வர், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர் மின்துறை தனியார்மயமாகாது என கபட நாடகம் ஆடி வருகின்றனர். முதல்வர் தீபாவளிக்கு முன்பு ரேஷன் கடைகளை திறந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்கள் விநியோகம் செய்வோம் என கூறினார். தீபாவளிக்கு 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்றார். ஆனால் எந்த ரேஷன் கடையையும் திறக்கவில்லை. ரேஷன் கடைகளுக்கு வாடகை தரவில்லை. ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை. இப்போது அங்கன்வாடிகளை தேடி வருகின்றனர்.

முதல்வர் ரங்கசாமி

மக்கள் ரேஷன் கடைகளை தேடி சுற்றி சுற்றி வருகின்றனர். ரூ.1,000 மதிப்பு பொருள்களை ரூ.500-க்கு வழங்குவோம் என ரங்கசாமி கூறினார். ஆனால் அதையும் தரவில்லை. புதுச்சேரி  மக்களை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி அரசு ஏமாற்றி வருகிறது. சில இடங்களில் வழங்கப்பட்ட அரிசி தரமற்றதாக உள்ளது. அரிசி கொள்முதலில் மிகப்பெரிய அளவில் கையூட்டு பெறப்பட்டுள்ளது. பல முக்கிய துறைகளை வகித்து பதவி சுகம் அனுபவித்த நமச்சிவாயம், காங்கிரஸ் ஆட்சியில்  சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டது என இப்போது கூறுகிறார். அப்போதே ஏன் அவர் அதை எதிர்க்கவில்லை ? அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஏன் வெளியே செல்லவில்லை?

ஆயுள் தண்டனை கைதி ஒருவரை விடுதலை செய்ய நமச்சிவாயம் என்னிடம் கேட்டார். ஆனால் அவரை விடுதலை செய்ய முடியாது என உறுதியாக நான் கூறினேன். இனியும் அமைச்சர் நமச்சிவாயம் என்னை பற்றியும், ஆட்சியை பற்றியும் விமர்சித்தால், அவர் எந்த ரவுடிக்காக  பரிந்துரை செய்தார் என பொதுமக்களிடம் பகிரங்கமாக தெரிவிப்பேன். தன்னுடைய சொத்தை காப்பாற்றிக் கொள்ள, பா.ஜ.க-வில் சேர்ந்து அமைச்சரான நமச்சிவாயம் நாவடக்கத்துடன் பேச வேண்டும். புதுச்சேரியில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து கிடப்பதற்கு முதல்வர் ரங்கசாமியும், அமைச்சர் நமச்சிவாயமும்தான் காரணம். புதுச்சேரி மக்களுக்கும் அது தெரியும்.” என்றார்.

புதுச்சேரி: “போலிப் பத்திரங்கள் மூலம் ரூ.1,000 கோடி சொத்துகள் அபகரிப்பு”-பகீர் கிளப்பும் நாராயணசாமி



.

Previous Post

உங்களுக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா…? தனுஷ் விஷயத்தில் நயனுக்கு இயக்குநர் குமரன் கேள்வி..!

Next Post

பாபா சித்திக் கொலை வழக்கு: 24-வது நபர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பாபா சித்திக் கொலை வழக்கு: 24-வது நபர் கைது

பாபா சித்திக் கொலை வழக்கு: 24-வது நபர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In