Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உங்களுக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா…? தனுஷ் விஷயத்தில் நயனுக்கு இயக்குநர் குமரன் கேள்வி..!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
November 16, 2024
in Default
1
உங்களுக்கு வந்தா ரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா…? தனுஷ் விஷயத்தில் நயனுக்கு இயக்குநர் குமரன் கேள்வி..!
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: “என்‌ கதைக்கும்‌ அந்தத்‌ தலைப்புக்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால்‌ LIC என்ற தலைப்பை வழங்க முடியாது என நேர்மையான முறையில்‌ பதில்‌ அளித்தும்‌ அதிகாரத்‌ தன்மையுடன்‌ அதே தலைப்பைத்‌ தன்‌ படத்துக்கு விக்னேஷ்‌ சிவன்‌ வைக்கிறார்‌ என்றால்‌, ‘உன்னால்‌ என்ன பண்ண முடியும்‌’ என்ற அதிகார நிலை தானே காரணமாய்‌ இருக்க முடியும்‌. அதற்கு எந்தக்‌ கடவுள்‌ மன்றத்தில்‌ விக்னேஷ்‌ சிவனைப்‌ பதில்‌ சொல்ல சொல்வீர்கள்‌” என இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மூன்று வினாடிக்‌ காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டுத்‌ தனுஷ்‌ உங்கள்‌ மீது வழக்கு தொடர்ந்ததால் வெகுண்டு எழுந்த நீங்கள்‌, கடந்த ஆண்டு ‘LIC’ என்ற என்‌ தலைப்பை உங்கள்‌ கணவர்‌ விக்னேஷ்‌ சிவன்‌ என்‌ அனுமதி இல்லாமல்‌ பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்‌. ‘LIC’ என்ற தலைப்பு என்‌ நிறுவனத்தின்‌ பெயரில்‌ இருப்பதை அறிந்த விக்னேஷ்‌ சிவன்‌ தன்‌ மேலாளர்‌ மூலம்‌ என்னிடம்‌ கேட்டு, நான்‌ வழங்காத நிலையிலும்‌ அதே தலைப்பை அவர்‌ படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில்‌ நியாயம்‌.

என்‌ கதைக்கும்‌ அந்தத்‌ தலைப்பிற்கும்‌ பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால்‌ LIC என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல்‌ இருக்கிறது என்று நேர்மையான முறையில்‌ பதில்‌ அளித்தும்‌ அதிகாரத்‌ தன்மையுடன்‌ அதே தலைப்பைத்‌ தன்‌ படத்திற்கு விக்னேஷ்‌ சிவன்‌ வைக்கிறார்‌ என்றால்‌, ‘உன்னால்‌ என்ன பண்ண முடியும்‌’ என்றஅதிகார நிலை தானே காரணமாய்‌ இருக்க முடியும்‌. அதற்கு எந்தக்‌ கடவுள்‌ மன்றத்தில்‌ விக்னேஷ்‌ சிவனைப்‌ பதில்‌ சொல்ல சொல்வீர்கள்‌.

உங்களை விட பலம்‌ பொருந்தியவர்கள்‌ என்றால்‌ இரண்டு வருடம்‌ பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும்‌ நீங்கள்‌, எளிய சிறிய படைப்பாளியான என்னிடம்‌ எதேச்சதிகாரதோடு நடந்துக்‌ கொண்டு, என்னை மன உளைச்சல்‌ ஆக்கியதற்காய்‌ நிச்சயம்‌ கடவுள்‌ மன்றத்தில்‌ பதில்‌ சொல்ல நேரிடும்‌. இப்பொழுது வரை அந்தத்‌ தலைப்பினால்‌ ஏற்பட்ட மன உளைச்சல்‌ என்னைப்‌ பாதித்துக்‌ கொண்டிருக்கிறது. என்‌ படத்தையும்‌ அது பாதிப்படையச்‌ செய்திருக்கிறது.

எந்தப்‌ படைப்பாளியும்‌ தன்‌ படைப்பைப்‌ பல காரணங்களோடும்‌ பல பொருட்செலவோடும்‌ தான்‌ கட்டமைக்கிறார்கள்‌. நீங்கள்‌ உங்கள்‌ வியாபார நோக்கத்திற்காக அதைப்‌ பயன்படுத்தும்‌ பட்சத்தில்‌ முறையான அனுமதி யோடும்‌ முறையான மதிப்பூதியத்தோடும்‌ பயன்படுத்த வேண்டும்‌ என்ற அறத்தைக்‌ கைக்கொள்ள வேண்டும்‌. நீங்கள்‌ இங்கு எதையும்‌ இலவசமாகச்‌ செய்யவில்லை. எங்கள்‌ படைப்புகளை மட்டும்‌ இலவசமாகப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள முயற்சிப்பதன்‌ மூலம்‌ படைப்பூலகதிற்கு மிக மோசமான வழிக்காட்டியாக நீங்களும்‌ உங்கள்‌ கணவரும்‌ இனங்காட்டப்படுவீர்கள்‌ என்பதை நினைவில்‌ கொள்க” என அதில் தெரிவித்துள்ளார்.

தமிழில் வெளியான ‘பூ’, ‘களவாணி’, ‘பட்டதாரி’ படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் எஸ்.எஸ்.குமரன். ‘அவள் பெயர் தமிழரசி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் படத்தின் தலைப்பான ‘எல்ஐசி’யை இயக்குநர் விக்னேஷ் சிவன் பயன்படுத்தியதாக அண்மையில் அவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

கலைஞரால் 2000-ம் ஆண்டு திறக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை: வீடியோ, புகைப்படங்களைக் கோரும் குமரி மாவட்ட நிர்வாகம்..

Next Post

புதுச்சேரி: `ஆயுள் கைதியை ரிலீஸ் செய்யச் சொன்னவர்தான் நமச்சிவாயம்!' – பகீர் கிளப்பும் நாராயணசாமி

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
புதுச்சேரி: `ஆயுள் கைதியை ரிலீஸ் செய்யச் சொன்னவர்தான் நமச்சிவாயம்!' – பகீர் கிளப்பும் நாராயணசாமி

புதுச்சேரி: `ஆயுள் கைதியை ரிலீஸ் செய்யச் சொன்னவர்தான் நமச்சிவாயம்!' – பகீர் கிளப்பும் நாராயணசாமி

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In