தம்பி ராமையாவின் கதை, வசனம், பாடல், இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராஜாகிளி’. இப்படத்தை இவருடைய மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது.
50-வயதைக் கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது.
வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில், படம் உலகம் முழுவதும் நவ. 29ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

