தலைக்கு 500 ரூபாய் சன்மானம்
1899-ம் ஆண்டு பிரிட்டிஷ் படையை எதிர்த்து, கொரில்லா போர் முறையில் மறைந்திருந்து தாக்கும் தந்திரத்தைப் பயன்படுத்தி வில், அம்புகளை மட்டுமே கொண்டு எதிரிகளை வீழ்த்தினார் பிர்சா முண்டா. இந்தப் போராட்டத்துக்கு `உல்குலான்’ என்று பெயர். இந்த தாக்குதலில் ஆங்கிலேயரின் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், நிலப்பிரபுக்களின் வீடுகள் உள்ளிட்டவை பழங்குடி மக்களால் சூறையாடப்பட்டன. ஏராளமான காவலர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனால் பிர்சா முண்டாவின் தலைக்கு 500 ரூபாய் சன்மானம் அறிவித்தது அன்றைய ஆங்கிலேய அரசாங்கம். உடனே அவர் தலைமறைவானார். இவரைத் தேடும் முயற்சியில் 400 பழங்குடி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர் தேடுதல் வேட்டையில் 1900ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி அடர்ந்த காட்டுப்பகுதியில் பிர்சா தனது தோழர்களுடன் கைது செய்யப்பட்டார்.
