Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

ராஜபாளையம்: ஒன்றரை ஆண்டுகளாக முடிக்கப்படாத பேருந்து நிலைய கட்டடப் பணிகள்… அவதியில் பயணிகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
November 12, 2024
in அரசியல் செய்திகள்
0
ராஜபாளையம்: ஒன்றரை ஆண்டுகளாக முடிக்கப்படாத பேருந்து நிலைய கட்டடப் பணிகள்… அவதியில் பயணிகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகரில் ஏற்கனவே செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையம், இட நெருக்கடி காரணமாகவும், கட்டடத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாகவும், அதே இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் கடந்த 2023 ஜனவரியில் தொடங்கப்பட்டது. சுமார் ரூ. 2.90 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகிறது.

ராஜபாளையம்

அதுவரை, மாற்று ஏற்பாடாக ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறிருக்க, கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையக் கட்டடம் 2024 ஜூன் மாதமே திறக்கப்படுவதாகப் பலகை வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை அது கட்டி முடிக்கப்படவில்லை. ஒன்றரை வருடங்களுக்கு மேல் ஆகியும் பணிகள் நிறைவு பெறாததால் பயணிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

தொடக்கத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டு குடிநீர் வசதிகள் செய்து தரப்பட்டது. தற்போது அதுவும் முறையான பராமரிப்பின்றி கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளது. பேருந்துக்காகக் காத்திருக்கும் பள்ளி மாணவிகள், பெண்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் எந்த அடிப்படை வசதியும் தற்போது வரை செய்து தரப்படாமல் தவிக்கவிடும் சூழல் உருவாகியிருக்கிறது. பேருந்துகளும் நகரின் பிரதான சாலையான காந்தி சிலை அருகே நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கிறார்கள்.

ராஜபாளையம்

மேலும், முறையான மின்விளக்கு வசதிகள் இல்லாததால் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியிருக்கிறது என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். புதிய கட்டடத்துக்கான வேலைகள் நிறைவு பெற்று, திறக்கும் வரை, பெண்களுக்கான மொபைல் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், முறையான பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் பயணிகள் தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்திருக்கிறது. குறிப்பாக, மழை நேரங்களில் ஒதுங்கி நிற்பதற்குக் கூட இடம் இல்லாமல் சாலையில் நிற்பதாக வேதனை தெரிவிக்கும் பயணிகள், அரசின் உடனடி நடவடிக்கையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

விருதுநகர்: பள்ளிக்காகத் தனியாளாகப் போராடிய மாற்றுத்திறனாளி; மக்கள் திரண்டு ஆதரவு தந்த சுவாரஸ்யம்!



.

Previous Post

`எதிர்க்கட்சித் தலைவர் பதவி’; ஸ்டாலினுக்கு அரசு ஊழியர்கள் பகிரங்க எச்சரிக்கை – 2026ல் எதிரொலிக்குமா?

Next Post

கர்நாடகா: `தாடிக்கு நோ?’ – கட்டுப்பாடு விதித்த கல்லூரி மீது ஜம்மு – காஷ்மீர் மாணவர்கள் புகார்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கர்நாடகா: `தாடிக்கு நோ?’ – கட்டுப்பாடு விதித்த கல்லூரி மீது ஜம்மு – காஷ்மீர் மாணவர்கள் புகார்!

கர்நாடகா: `தாடிக்கு நோ?' - கட்டுப்பாடு விதித்த கல்லூரி மீது ஜம்மு - காஷ்மீர் மாணவர்கள் புகார்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In