காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திருமணமே செய்து கொள்ளவில்லை. ராஜீவ் காந்தி குடும்பத்தில் இருந்து ஏற்கனவே ராகுல் காந்தியும், அவரது சகோதரி பிரியங்கா காந்தியும், தாயார் சோனியா காந்தியும் அரசியலில் இருக்கின்றனர். தற்போது ராகுல் காந்தி காந்தி தனது சகோதரி பிரியங்கா காந்தியின் மகன் ரைஹான் ராஜீவ் வதேராவை வெளியுலகிற்கும், அரசியலுக்கும் அறிமுகம் செய்துள்ளார். தனது சோசியல் மீடியா பக்கத்தில் ராகுல் காந்தி இரட்டை விரல்களை தூக்கிக்காட்டி ரைஹானுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதனை பார்த்த காங்கிரஸ் ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் ராகுல் காந்தி தனது மருமகனை அரசியலுக்கு அறிமுகம் செய்திருப்பதாக கருத்துகளை பகிர்ந்துள்ளனர். ரைஹான் நேரு குடும்பத்தில் 5வது தலைமுறை அரசியல்வாதியாவார்.
