வடக்கு காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பேர் உயிரிழந்தனர்.
குடியிருப்புப் பகுதி அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 5 கட்டடங்கள் இடிந்தன. தாக்குதலுக்குள்ளான இடத்தில் மீட்புப் படையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் செல்வதில் சிரமம் ஏற்பட்டதால் உள்ளூர் மக்கள் கழுதைகள் மூலம் உடல்களைக் கொண்டுவந்தனர்.