Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கள்ளக்காதலை விட்டதால் ஆத்திரம்.. இரவில் வீடு புகுந்து தாய்,மகளை கொடூரமாக வெட்டிய கொடூரம்.. திண்டுக்கல்லில் பகீர்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 26, 2023
in அரசியல் செய்திகள்
0
கள்ளக்காதலை விட்டதால் ஆத்திரம்.. இரவில் வீடு புகுந்து தாய்,மகளை கொடூரமாக வெட்டிய கொடூரம்.. திண்டுக்கல்லில் பகீர்!
37
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திண்டுக்கல்லில் இரவில் கள்ளக்காதலன் வீட்டில் புகுந்து தாய், மகள் இருவரையும் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் ஐய்யனார். இவரது மனைவி வள்ளியம்மாள் (55). இந்த தம்பதிக்கு ராசாத்தி (33) என்ற மகள் இருந்தார்.

இவர் தனது தாய், கணவர் லட்சுமணன் (38), 2 குழந்தைகள் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். கள்ளிப்பட்டி அருகே தனியார் இரும்புத் தொழிற்சாலையில், லட்சுமணன் கூலி வேலை செய்து வரும் நிலையில் அவரது மனைவி ராசாத்தி 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வந்தார்.

இந்நிலையில், வள்ளியம்மாள், அவரது மகள் ராசாத்தி, மருமகன் லட்சுமணன் ஆகியோர், இரவு உணவுக்குப் பின் தூங்கச் சென்ற நிலையில், திடீரென கத்தியுடன் புகுந்த மர்மநபர் ஒருவர், வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த தாக்குதலில் தாய் வள்ளியம்மாள் மற்றும் அவரது மகள் ராசாத்தி ஆகிய இருவரும், நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் கிடந்த லட்சுமணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த கொலை குறித்து, போலீசார் விசாரித்தபோது கள்ளக்காதல் விவகாரத்தால் இந்த கொலை நடந்தது தெரியவந்தது. கடந்த 2 ஆண்டுகளாக ராசாத்தியுடன் தகாத உறவில் இருந்து வந்த சத்தியபிரியன் என்பவர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இவர்களின் கள்ளத்தொடர்பை அறிந்த கணவர் லட்சுமணன் மற்றும் தாய் வள்ளியம்மாள், ராசாத்தியை கண்டிக்கவே, அவர், சத்தியபிரியனுடனான தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சத்தியபிரியன், இந்த கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

 அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சத்தியபிரியனை, போலீசார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.

Previous Post

நாசிக்கில் பசு காவலர்களால் ஒருவர் கொலை.

Next Post

டெல்லியில் தொழிலதிபர் துப்பாக்கி முனையில் கொள்ளை.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
டெல்லியில் தொழிலதிபர் துப்பாக்கி முனையில் கொள்ளை.

டெல்லியில் தொழிலதிபர் துப்பாக்கி முனையில் கொள்ளை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In