தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான இந்த கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. இது குறித்தான அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியீட்டுள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து பள்ளிகளுக்கும் கால் ஆண்டு பரீட்சை முடிந்து தற்போது இரண்டாம் பருவம் தொடங்கியுள்ளது. இதனைத்த தொடர்ந்து ஆண்டின் இறுதியில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளுக்கு தயாராகும் வண்ணம் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
