“முசோலினி’ ஒரு பக்கம் ஹீரோவாகவும், இன்னொரு பக்கம் வில்லனாகவும் பார்க்கப்படுகின்ற ஒருவர். உண்மையிலேயே முசோலினி என்பவர் யார்? அவர் சிங்கமா… ஆடா?! அவருடைய ஒட்டுமொத்தமான வாழ்க்கை வரலாறையும், நம்முடைய ‘ஜூனியர் விகடன்’ இதழில், உதவி பொறுப்பாசிரியர் திரு. பாலுசத்யா தொடராக எழுத தொடங்கி இருக்கிறார். அதற்கான ஓவியங்களை திரு எம். ஜெயசூர்யா வரைந்து கொடுத்திருக்கிறார். ‘முசோலினி ஒரு பேரழிவுகாரனின் கதை’ என்கிற தொடர், புதிய Video Series ஆக வருகிறது. சின்ன வயதில் வேலை தேடி சுவிட்சர்லாந்துக்கு பறந்தார் முசோலினி. அங்கு அவர் சந்தித்த துயரங்கள், வேதனைகள்… முக்கியமாக பல நாட்கள் 3 வேளை உணவு கிடைக்காமல் வறுமையில் வாடியுள்ளார். அந்த நேரத்திலும் அவர் மனதில் கனன்று கொண்டிருந்த கனவு… வீடியோவை முழுமையாக காண லிங்கை கிளிக் செய்யவும்.
