5,975 சிறப்பு ரயில்கள்
புதுதில்லியில் வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்து அஸ்வினி வைஸ்ணவ் பேசியதாவது:
“பண்டிகை காலத்தை முன்னிட்டு 108 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மற்றும் சத் பண்டிகைக்காக 12,500 பெட்டிகள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2024-2025 நிதியாண்டில் மட்டும் இதுவரை 5,975 சிறப்பு ரயில்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்மூலம் பண்டிகை காலத்தில் ஒரு கோடி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும்.
கடந்த 2023- 2024ஆம் ஆண்டில் தீபாவளி, சத் பூஜை பண்டிகைகளுக்கு மொத்தம் 4,429 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன” எனத் தெரிவித்தார்.
