விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிக்குட்பட்ட வத்திராயிருப்பில் அ.தி.மு.க. சார்பில் அறிஞர் அண்ணா 116வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, ஸ்ரீவில்லிப்புத்தூர் அ.தி.மு.க எம்.எல்.ஏ. மான்ராஜ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட கழகச்செயலாளருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுகையில், “பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை மு.க.ஸ்டாலினோ, தி.மு.க.வோ நினைத்துக்கூட பார்ப்பதில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் கட்சிக்காரர்களை கொத்தடிமைகளாக நடத்துகிறார். இந்த ஆட்சியில் எல்லா பொருள்களின் விலைவாசியும் உயர்ந்துவிட்டது. ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் , பருப்பு கிடையாது. இந்த தி.மு.க ஆட்சியில் பொருளாதார நெருக்கடி, பொருளாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்க தகுதியுள்ள 1000 குடும்ப அட்டையில், வெறுமனே 100 கார்டுகளுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் ஊற்றப்படுகிறது.
