மஹிந்திரா & மஹிந்திரா, பிடிலைட், டாக்டர் ரெட்டிஸ், அல்வாரெஸ் & மார்சல் போன்ற நிறுவனங்களுக்கு தவால் புச் ஆலோசகராக இருந்தது குறித்து காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. அவர் மேற்கொண்ட அந்த ஆலோசனைப் பணிகள், தாவல் புச்-சின் நிபுணத்துவம் மற்றும் அவர் ஹிந்துஸ்தான் யூனிலீவரில் செயல் இயக்குநராக பணியாற்றிய 35 ஆண்டுக்கால தொழில்முறையை அடிப்படையாகக் கொண்டது.
மாதபி செபி தலைவராவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது, 2016-2017-ம் ஆண்டு மாதபி புச் செபியில் சேர்வதற்கு முன்பே, தவால் புச் தனது ஓய்வுக்குப் பிறகு அகோரா அட்வைசரி நிறுவனத்தை தொடங்கினார். 2019-ம் ஆண்டு மஹிந்திரா & மஹிந்திரா இந்த அகோரா அட்வைசரியில் 94% பங்களிப்பை வழங்கியது. இது, தவால் புச்சுக்கு இருக்கும் நிபுணத்துவத்துக்காக வழங்கப்பட்டது.

மேலும், தவால் புச்சின் அட்வைசரி பணிக்கும், செபி விசாரணைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை பிடிலைட், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தியிருக்கிறது. அவர் பணியாற்றிய அந்த வாய்ப்புகள் எல்லாம், அவரது தொழில்முறை பின்னணியின் அடிப்படையில் பெறப்பட்டது என்பதை இரு நிறுவனங்களும் தெளிவுபடுத்தியுள்ளன.
அதேபோல, அகோரா அட்வைசரி நிறுவனத்தின் மூலம் அனைத்து ஆலோசனை வருமானமும் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.