கொல்கத்தாவில் அரசு நடத்திவரும் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில், இரவுப் பணிக்கு வந்த பெண் மருத்துவர் கருத்தரங்கு அறையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, மேற்கு வங்கத்தில் பல்வேறு போராட்டங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
முன்னதாக, மருத்துவமனையின் பாதுகாப்புப் பொறுப்பைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 18 அன்று மருத்துவமனையைச் சுற்றிலும் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு செப்டம்பர் 30 வரை மேலும் நீட்டித்துள்ளது.
