பா.ஜ.க தனித்து போட்டியிடுகிறது. முன்னதாக கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க, மெஹபூபா முஃப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சி இணைந்து தேர்தலை சந்தித்தன. தேர்தல் முடிவில் மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களிலும், பா.ஜ.க 25 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆனால் பிறகு ஏற்பட்ட குழப்பத்தால் இரு கட்சிகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இம்முறை தனித்து களம் காணும் பா.ஜ.க, ‘பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஒழிப்பதில் கவனம் செலுத்தப்படும். ஒவ்வொரு வீட்டிலும் மூத்த பெண்ணுக்கு ஆண்டுதோறும் ரூ.18,000 வழங்கப்படும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 1,000 இடங்கள், 5 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்’ போன்ற வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. மோடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு இந்தியா கூட்டணியின் ஒற்றுமை, பா.ஜ.க மீதான அதிருப்தி காரணமாக சொல்லப்படுகிறது. மேலும் காங்கிரஸிலிருந்து விலகி தனி கட்சி ஆரம்பித்த குலாம் நபி ஆசாத் தேர்தலில் போட்டியிடாததும் காங்கிரஸுக்கு பலமாக பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. மாநில அந்தஸ்து வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அடிக்கடி நடக்கும் தீவிரவாதிகள் தாக்குதல் என பாஜகவின் முன்னாள் ஏராளமான சவால்கள் இருக்கின்றன. எனினும் சுயேட்சைகளின் ஆதரவுடன் களமிறகுகிறது பாஜக. விரைவில் நடக்கவிருக்கும் தேர்தல் மக்கள் மனதை பிரதிபலிக்கும்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
