க்ரை (CRY-Child Rights and You) குழந்தை உரிமைகளும் நீங்களும் அமைப்பு 10, செப்டம்பர், செவ்வாய் கிழமை அன்று சென்னை, இலயோலா கல்லூரியில் பெண் குழந்தைக்கான கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும்விதமாக; “பெண் படிக்கிறார், பெண் வழிநடத்துகிறார்” – பெண் கல்விக்காக கல்வியும் சட்ட ஆதரவை முன்வைத்து; பள்ளிக்குழந்தைகளின் ஓவியங்கள், புராணமறுப்பு விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்வுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த கலை விழாவினை சிறப்பாக நடத்தினர். இவ்விழா பெண் குழந்தைகள் மேல்நிலைக் கல்வியைத்தொடர்ந்து உயர் கல்விக்கு செல்லவேண்டும் என்பதை மையப்படுத்தியிருந்தது. இக்கல்விக்கலைவிழா சென்னை இலயோல கல்லூரியின் சமூகவியல் புலத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. இவ்விழாவில் திருமிகு. சபரினா சிகா அவர்கள் தலைமையேற்று பேசுகையில், “பேனா முனை வாளைவிட கூறியது எனக்கூறுவர், அதுபோல் கலை ஓவியங்கள் வரலாற்றை மாற்றியமைத்துள்ளன.
