மும்பை வழக்கறிஞர் ஒருவரிடம் குற்றப்பிரிவு அதிகாரிகள் போல் நடித்து அடையாளம் தெரியாத இருவர் ரூ.5 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நடக்கும் பெரும்பாலான மோசடிகள், போலீஸ், குற்றப்பிரிவு போன்ற புலனாய்வு ஏஜென்சிகள் போல நடித்துதான் நடக்கிறது.
இவர்கள் தொலைபேசி மூலமாகவும், நேரிலும் லட்சக்கணக்கில் பணம் பறிக்கின்றனர். சமீபத்தில் இது போன்றொரு மோசடி சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. குற்றப்பிரிவு அதிகாரிகள் என கூறிக்கொண்ட கும்பல், வழக்கறிஞரிடமிருந்து ரூ.5 லட்சம் கொள்ளையடித்து சென்றுள்ளனர். குற்றப்பிரிவு அதிகாரிகள் போல் நடித்து தௌசிப் ஷேக்கிடமிருந்து பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகள் மீது கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறிக்கையின்படி, மோசடியில் பாதிக்கப்பட்டவர் பாந்த்ராவில் வசிக்கும் வழக்கறிஞரான 37 வயதான தௌசிப் ஷேக் ஆவார். தௌசீப்பின் உறவினர்கள் மும்பையில் டிராவல் ஏஜென்சி மற்றும் பணப் பரிமாற்ற சேவைகளை நடத்தி வருகின்றனர். வங்கிக் கணக்கில் பணப் பரிமாற்றம் செய்வது போன்ற உதவிகளை அந்த குடும்பத்திற்கு தௌஸீஃப் அவ்வப்போது செய்வார். இந்நிலையில், இரண்டு வாடிக்கையாளர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்ய தனது சகோதரர் ரூ.5.70 லட்சம் கொடுத்ததாக ஷேக்கின் புகாரில் கூறப்பட்டுள்ளது. மறுநாள் காலை பணத்தை டெபாசிட் செய்ய ஷேக் திட்டமிட்டிருந்தார்.
ஏடிஎம் மூலம் ரூ.70,000 கணக்கில் டெபாசிட் செய்த பிறகு, ஏடிஎம் கவுன்டர் முன் இரண்டு பேர் வந்து, தாங்கள் குற்றப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறினர். பின்னர், அவரிடம் விசாரணைக்கு வருமாறு கூறினர். தௌசிப் தயங்கியதையடுத்து, இருவரும் அவரை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றினர். காரில் செல்லும் போது பையில் இருந்த பணம் குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்தனர். வழக்கு வலுவாக இருப்பதாகவும், அவர் மீது வழக்கு பதிவு செய்து விடுவதாகவும் தௌசிப்பை மிரட்டினர். பின்னர் அந்த கும்பல் பையில் இருந்த பணத்தை திருடி சாண்டா குரூஸ் என்ற இடத்தில் வேனை நிறுத்திவிட்டு தௌசிப்பை இறக்கிவிட்டு சென்றனர். பின்னர், வீட்டிற்கு வந்த பிறகு, தௌசிப் தனது சகோதரரிடம் கூறினார்.
கொள்ளை சம்பவத்தை அடுத்து மனமுடைந்த ஷேக், வீடு திரும்பியதும் நடந்த சம்பவம் குறித்து தனது சகோதரரிடம் தெரிவித்தார். நடந்ததைக் கேட்ட ஷேக்கின் சகோதரர் திருட்டு குறித்து உடனடியாக போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து ஷேக்கின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் கர்ஹார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஆள்மாறாட்டம் மற்றும் பணமோசடி குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தகவலின்படி, வாகன பதிவு எண்ணை அடையாளம் காணவும், குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டறியவும், வழக்கறிஞரை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Also Read |
2000 குற்றவாளிகளை ரிலீஸ் செய்த போலி நீதிபதி… இந்தியாவையே அதிரவைத்த கிரிமினல் மிட்டல்!
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் சுமார் 5.5 அடி உயரம் என்றும், 30 வயதுடையவர்கள் என்றும் வழக்கறிஞர் காவல்துறையிடம் கூறியுள்ளார். குற்றவாளிகளில் ஒருவர் நீல நிற சட்டை மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தார், மற்றொருவர் வெள்ளை சட்டை மற்றும் காக்கி பேன்ட் அணிந்திருந்தார் என்றும் வழக்கறிஞர் காவல்துறையிடம் கூறியுள்ளார்.
.
