Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ், பாஜகவின் விருப்பம்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ், பாஜகவின் விருப்பம்: அமெரிக்காவில் ராகுல் காந்தி பேச்சு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாஷிங்டன்: பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை விரும்புவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், டெக்ஸôஸ் நகரில் இந்திய வம்சாவளியினரிடையே ஞாயிற்றுக்கிழமை உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பெண்களைப் பற்றிய இந்திய ஆண்களின் அணுகுமுறை மாற வேண்டும். பெண்கள் அரசியலில் பங்கு பெறுவதை நான் ஆதரிக்கிறேன்.

பெண்களுக்கான இடஒதுக்கீட்டு மசோதா அமலாவதன் மூலம் இது சாத்தியமாகும். பெண்கள் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்களுக்கு பொருளாதார ரீதியில் ஆதரவளிக்க வேண்டும். அவர்கள் ஆண்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும்.

பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அவர்கள் உணவு சமைத்துக் கொண்டும் அதிகம் பேசாமலும் இருக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவும் விரும்புகின்றன. ஆனால் தாங்கள் விரும்பியதை பெண்கள் செய்ய வேண்டும் என்று நாங்கள் (காங்கிரஸ் கட்சி) விரும்புகிறோம்.

இந்தியா என்பது ஒரே சிந்தனை என்று ஆர்எஸ்எஸ் நம்புகிறது. ஆனால் இந்தியா என்பது பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பு என்று நாங்கள் நம்புகிறோம்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போலவே ஒவ்வொருவரும் பங்கேற்பதை நாங்கள் விரும்புகிறோம். தங்களின் ஜாதி, மொழி, மதம், பாரம்பரியம், வரலாறு ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு ஒவ்வொருவரும் கனவுகாண அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இது ஒரு போராட்டமாகும். இந்தியப் பிரதமர் அரசியல் சாசனத்தின் மீது தாக்குதல் தொடுக்கிறார் என்பதை இந்தியாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் தேர்தலின்போது புரிந்து கொண்டனர். இந்திய அரசியலில் அன்பு, மரியாதை, அடக்கம் ஆகியவை காணப்படுவதில்லை. இந்தப் பண்புகளை இந்திய அரசியலுக்குக் கொண்டுவரவே நான் முயற்சிக்கிறேன் என்றார்.

திறமைசாலிகளுக்கு மரியாதை இல்லை: டல்லாஸ் நகரில் டெக்ஸôஸ் பல்கலைக்கழக மாணவர்களுடனான கலந்துரையாடலின்போது, “திறமைசாலிகளுக்கு இந்தியாவில் மரியாதை இல்லை’ என்று ராகுல் குற்றஞ்சாட்டினார்.

அவர் மேலும் பேசுகையில், “இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் வேலையில்லாத் திண்டாட்டத்தைச் சந்திக்கின்றன. ஆனால், சீனாவில் வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை. ஏனெனில் உலகளாவிய உற்பத்தியில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவில் திறமைக்குப் பஞ்சமில்லை. திறமைக்கு மரியாதைதான் இல்லை. உற்பத்தி விவகாரத்தில் இந்தியாவால் சீனாவுடன் போட்டி போட முடியும்.



.

Previous Post

GOA: பசுமை மண்டலத்தில் கட்டடங்கள்… சட்டத்திருத்ததால் பயனடைந்த அமைச்சர்கள், அரசியல்வாதிகள் | ஷாக்

Next Post

Tamil Live Breaking News: தொடக்க கல்வி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamil Live Breaking News: தொடக்க கல்வி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

Tamil Live Breaking News: தொடக்க கல்வி ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In