இந்த வழக்கு, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் உஜ்ஜால் புயான் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, கெஜ்ரிவால் கைதுசெய்யப்படும் முன் சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும், விசாரணை நீதிமன்றம் ஒருதலை பட்சமாக கைது உத்தரவு பிறப்பித்தது என்றும் வாதாடினார்.
மேலும் கெஜ்ரிவாலின் பெயர் சி.பி.ஐ எஃப்.ஐ.ஆரில் இல்லை என்றும், அரசியலமைப்புச் செயல்பாட்டாளரான அவர் தப்பியோடும் அபாயம் இல்லை என்றும் தெரிவித்தார்.
பண மோசடி வழக்கில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றமும் விசாரணை நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். மேலும், “மதுபானக் கொள்கை வழக்கு காரணமாக சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை, 2 ஆண்டுகள் கைதுசெய்யாமல் இருந்த சி.பி.ஐ, அமலாக்கத்துறை பண மோசடி வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகு ஜூன் 26-ம் தேதி `முன்கூட்டிய கைது (Insurance Arrest)” நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டினார்.

