அதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மனைவியின் தரப்பு வழக்கறிஞர், “மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர் மீது அமலாக்கத்துறை தவறான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. இதயத்திலிருக்கும் அடைப்புகளை எப்படி போலியாகக் காட்டமுடியும்?” என்று தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தார்.
இறுதியாக அமலாக்கத்துறையின் கோரிக்கைகளை நிராகரித்த நீதிமன்ற அமர்வு, “ஆட்கொணர்வு மனு மீதான உரிய காரணத்தின் அடிப்படையில்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்த பின்னரே தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். எனவே உயர் நீதிமன்றத்தின் உத்தரவை சந்தேகிக்க முடியாது.
அதோடு, மருத்துவமனையில் இருக்கும் ஒருவரைக் காவலில் எடுக்க முடியுமா… உடல்நிலை சரியில்லை என்று மருத்துவக்குழு கூறிய பின்னும் அவரை காவலில் எடுக்கக் கோருகிறீர்களா… அவரின் சிகிச்சை முடிந்த பின்னர் விசாரணை மேற்கொள்ளலாமே. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது அதிருப்தியளிக்கிறது. இதில் மீண்டும் மருத்துவக் குழு அமைத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு முழு அதிகாரம் இருக்கிறது. எனவே இந்த வழக்கில் நாளை உயர் நீதிமன்ற விசாரணையில் தீர்ப்பு என்னவென்பதை பார்த்துவிட்டு விசாரிப்போம் அதுவரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது” எனக் கூறி வழக்கை ஜூலை 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதோடு, “மெரிட் அடிப்படையில் வழக்கை விசாரிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் வழக்கை காரணம் காட்டி வழக்கைத் தள்ளிவைக்கக்கூடாது” என உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

