போராட்டத்திற்கு மத்தியில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, பத்லாப்பூரில் நடந்த சம்பவத்தை தீவிரமாக கவனித்து வருவதாகக் கூறினார். “இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது, சம்பவம் நடந்த பள்ளியின் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுக்கப் போகிறோம். இந்த வழக்கை விரைவுபடுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம், குற்றம் நிரூபிக்கப்பட்டால் யாரையும் விட்டுவைக்க மாட்டோம்” என்று ஏக்நாத் ஷிண்டே கூறினார்.

