Jobs oi-Vignesh Selvaraj
Published: Tuesday, June 20, 2023, 14:13 [IST]
சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 10,748 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது TNPSC தேர்வர்களை குஷியாக்கி உள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-4, குரூப்-2, க்ரூப்-2A, குரூப்-1 ஆகியவற்றில் அடங்கிய பதவிகளுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக, கடந்த சில ஆண்டுகள் போட்டித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. 2022 ஆம் ஆண்டு குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. 18 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர். இந்தத் தேர்வின் மூலம், 7 ஆயிரத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,117 காலிப் பணியிடங்களாக அதிகரிக்கப்பட்டது. குரூப் 4 தேர்வு முடிவு கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டிற்கான ஷெட்யூலை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி. அதன்படி குரூப் 4 போட்டித் தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என்ற டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் அறிவிப்பு இளைஞர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2022 ஜூலையில் நடைபெற்ற தேர்வில் தவறவிட்டவர்களுக்கு அடுத்து 2024 பிப்ரவரி மாதம் குரூப் 2 வாய்ப்பு கிடைக்கும். இதனால், கடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், காலி பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், குரூப் 4 காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748-ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது. குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை ஏற்கனவே 10,117-ஆக அதிகரித்ததை தொடர்ந்து, மீண்டும் திருத்தப்பட்ட காலி பணியிடங்களின் எண்ணிக்கை 10,748-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கூடுதலாக 631 பேர் குரூப் 4 வேலைவாய்ப்பை பெறுவார்கள். இந்தச் செய்தி டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், இன்னும் இந்த பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற
Allow Notifications
You have already subscribed English summary
The number of vacancies for TNPSC Group 4 exam has been increased to 10,748. Due to this, an additional 631 people will get Group 4 employment.
Story first published: Tuesday, June 20, 2023, 14:13 [IST]

