உத்தரகண்ட் மாநிலத்தில், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த செவிலியர் 2 வாரங்களுக்கு முன்பு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டத்தில், பணி முடித்துவிட்டு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த செவிலியர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், ஆகஸ்ட் 14ம் தேதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நைனிடால் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியரின் உடல் ஜூலை 30ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திலிருந்து எடுக்கப்பட்டது.
