Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மோசமான வானிலை.. கடலூர் மீனவர்களே உஷார்.. கடலுக்கு செல்ல தடை போட்ட மீன்வளத்துறை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 18, 2023
in அரசியல் செய்திகள்
0
மோசமான வானிலை.. கடலூர் மீனவர்களே உஷார்.. கடலுக்கு செல்ல தடை போட்ட மீன்வளத்துறை!
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Cuddalore oi-Nantha Kumar R
Published: Sunday, June 18, 2023, 19:31 [IST]
கடலூர்: வங்கக்கடலில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடலூர் மாவட்ட மீனவர்களுக்கு மீன்வளத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி எடுத்தது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் தென்மேற்கு பருவழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதானது. இந்நிலையில் தான் வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் இன்று கூலாக வானிலை நிலவியது. இதற்கிடையே தான் தமிழக வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் முக்கிய விஷயத்தை கூறியது. அதாவது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமா வரும் புதன்கிழமை வரை தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தான் இன்று கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் மிதமான மழை பெய்தது. இதற்கிடையே தான் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மீன்வளத்துறை சார்பில் மீனவர்களுக்கு பிறப்பக்கப்பட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: “ஹை அலர்ட்”.. சுழன்றடிக்கும் சூறாவளி! 150 கிமீ ஸ்பீடா? மீனவர்கள் உடனே கரை திரும்புங்க – வானிலை மையம் தமிழக வங்கக் கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை காரணமாக காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசும். இதுபற்றி வானிலை மையம் எச்சரித்துள்ளதால் கடலூர் மாவட்ட மீனவர்களும் அனைத்து வகை மீன்பிடி படகுகளும் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் கடந்த 2 மாதமாக மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இந்த தடைக்காலம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தான் மீன்டும் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இதற்கிடையே தான் தற்போது மோசமான வானிலையால் கடலூர் மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Due to the bad weather prevailing in the Bay of Bengal, the Fisheries Department has issued an order to fishermen of Cuddalore district not to go fishing in the sea from this afternoon until further notice.
Story first published: Sunday, June 18, 2023, 19:31 [IST]

.

Previous Post

“தமிழகத்தில் பிராமணர்களுக்கென்று தனிக்கட்சி… 2024 தேர்தலில் 33 இடங்களில் போட்டி!" – எஸ்.வி.சேகர்

Next Post

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: கொடுங்கையூர் போலீஸார் நடவடிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: கொடுங்கையூர் போலீஸார் நடவடிக்கை

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு: கொடுங்கையூர் போலீஸார் நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In