Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

என்னப்பா நடக்குது நாட்டுல… கொலை நகரமாக மாறும் தமிழ்நாடு..! இன்று மட்டும் 3 கொலைகள்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 28, 2024
in Default
1
என்னப்பா நடக்குது நாட்டுல… கொலை நகரமாக மாறும் தமிழ்நாடு..! இன்று மட்டும் 3 கொலைகள்..
78
SHARES
125
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிவகங்கை: சிவகங்கை அருகே பாஜக மாவட்ட நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடலூரில் அதிமுக பிரமுகர், திருவட்டாறில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர், சிவகங்கையில் பாஜக நிர்வாகி ஆகியோர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தமிழத்தை அதிர வைத்துள்ளன.

சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் அதே பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். பாஜக கூட்டுறவு பிரிவு சிவகங்கை மாவட்ட செயலாளராகவும் இருந்து வந்தார். இவர் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த ஒரு மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியது.

அந்த வழியாக வந்தவர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், 108 ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், செல்வக்குமாரை பரிசோதித்து, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், செல்வக்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தை அறிந்த கிராம மக்கள் மற்றம் பாஜகவினர் கொலை குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்.பி டேங்கரே பிரவீன் உமேஷ், குற்றவாளிகளைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். மூன்று நாட்களில் அடுத்தடுத்து 3 கொலைகள் நடைபெற்ற சம்பவம் சிவகங்கை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் வெவ்வேறு இடங்களில் 3 அரசியல் பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். கடலூர் திருப்பனம்பாக்கம் பகுதியில் அதிமுக பிரமுகர் பத்மநாதன், திருவட்டாறில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் ஜாக்சன், சிவகங்கையில் பாஜக நிர்வாகி செல்வக்குமார் ஆகியோர் அடுத்தடுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தமிழத்தை அதிர வைத்துள்ளன.

Previous Post

”இதுதான் உண்மை”…திமுக போராட்டம் நடத்தியது இதுக்குத்தான் – போட்டு உடைத்த இ.பி.எஸ்

Next Post

ரீல்ஸ் வீடியோவுக்காக ரயிலில் சாகசம் செய்த இளைஞர்.. கை, கால் துண்டானதால் அதிர்ச்சி..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ரீல்ஸ் வீடியோவுக்காக ரயிலில் சாகசம் செய்த இளைஞர்.. கை, கால் துண்டானதால் அதிர்ச்சி..!

ரீல்ஸ் வீடியோவுக்காக ரயிலில் சாகசம் செய்த இளைஞர்.. கை, கால் துண்டானதால் அதிர்ச்சி..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இந்த கொலைகளை தடுப்பதற்கு ஒரே வழி ரவுடிகளை அதாவது இரண்டு கொலைகளுக்கு மேல் செய்த கொலையாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In