முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பென் டிரைவில் இல்லாத ஆவணம் திடீரென எப்படி வந்தது என அமலாக்கத்துறை பதிலளிக்க நேற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இன்று விசாரணையைத் தொடர செந்தில் பாலாஜி தரப்பு நீதிபதியிடம் முறையீடு செய்த நிலையில், விசாரணையை தள்ளிவைத்தார் உச்சநீதிமன்ற நீதிபதி ஓகா.
