நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து அதிக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்திய சாதனை மொரார்ஜி தேசாய்க்கு உண்டு. அவர் மொத்தம் பத்து பட்ஜெட் உரைகளையும், தொடர்ச்சியாக ஆறு பட்ஜெட் உரைகளையும் தாக்கல் செய்துள்ளார். பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் காலத்தில் தேசாய் நிதியமைச்சராக பத்து பட்ஜெட்களை தாக்கல் செய்தார். பிப்ரவரி 28, 1959 அன்று தேசாயின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
