எஸ்.ஜி. சூர்யா ஆஜர்படுத்த கொண்டுவரப்பட்டபோது நீதிபதி வீட்டின் முன்பாக பாஜகவினர் கூடியிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் பாதுகாப்புக்காக அதிக அளவில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவுக்குப்பின் எஸ்.ஜி. சூர்யாவை காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துசென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
எஸ்.ஜி.சூர்யாவின் கைது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ள மதுரை மாவட்ட பாஜக, கண்டன ஆர்பாட்டம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

