உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதன்சு துலியா, அஹ்சானுதீன் ஆகியோர் அமர்வுக்கு வந்த சவுக்கு சங்கரின் வழக்கில் நடைபெற்ற விசாரணையில் பரபரப்பான கருத்துக்களை நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
குறிப்பாக, “மனித பிறவியிலேயே மிக மோசமான நடத்தை கொண்டவராக சவுக்கு சங்கரை பார்க்கிறோம். தன்னுடை எல்லை மீறிய பேச்சு, நடத்தையால் எல்லா விதமான எல்லைகளையும் தாண்டும் வகையில் சவுக்கு சங்கர் நடந்துகொண்டுள்ளார். ஏன் இப்படி ஒழுக்கமற்ற முறையில் சவுக்கு சங்கர் பேசியுள்ளார், நடந்துகொண்டார் என்று எங்களுக்கு தெரியவில்லை. அவர் இப்படி சமூக வலைதளம், ஊடகம் மூலம் கொதித்துக்கொண்டே இருக்க என்ன காரணம், அவரை கொஞ்சம் அமைதியாக இருக்க சொல்லுங்கள். உயர்நீதிமன்றத்தில் கூட கண்ணியமான முறையில் சவுக்கு சங்கர் நடந்துகொள்ளவில்லை என்பது தெரிகிறது.
நிறைவாக, சவுக்கு மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரிய அவரது தாயார் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை 18-ந் தேதி ஒத்தி வைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

நீதிபதியின் கருத்து அவர் சொல்லிவிட்டார் ஆனால் எனது கருத்தோ சவுக்கு சங்கர் ஒரு நல்ல பொதுநலவாதி