ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் திரையுலகமே குவிந்திருந்தது என்றே கூற வேண்டும். அதில் நடைபெற்ற பல்வெறு நிகழ்வுகள் தற்போது வைரலாகி வருகின்றன. அவற்றுள் ஒன்றாக ஐஸ்வர்யா ராய் பச்சன், அபிஷேக் பச்சன் மற்றும் ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் பிரமாண்டமான திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யாவுடன் தனியாக வந்திருந்தார். அவரது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் அவரது பெற்றோர் மற்றும் பழம்பெரும் நடிகர்களான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் மற்றும் அவரது சகோதரி ஸ்வேதா பச்சன் நந்தா குடும்பத்தினருடன் வந்ததால் இது ரசிகர்களிடையே மிகப்பெரும் கேள்வியை எழுப்பியது. ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் அபிஷேக் பச்சன் தனது குடும்பத்தினருடனும், ஐஸ்வர்யா ராய் தனது மகளுடனும் தனித்தனியாக புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதால் இவர்களின் விவாகரத்து சர்ச்சை மீண்டும் எழுந்தது.
👀👀👀👀 pic.twitter.com/sTq1x7KOdm
— Groovy (@BibaswanM) July 13, 2024
இந்நிலையில் அவர்கள் தொடர்பான புகைப்படம் மீண்டும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் ஐஸ்வர்யா ராய் மகள் ஆரத்யா அபிஷேக் பச்சனுடன் இருக்கும் புகைப்படமே அது. அந்த புகைப்படத்தில் ஹிருத்திக் ரோஷனும் அவர்களுடன் இருக்கிறார். வைரலாகி வரும் இந்த புகைப்படமானது ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் ஐஸ்வர்யா ராய்- அமிதாப் பச்சன் விவகாரத்து தொடர்பான கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றே கூற வேண்டும்.
.
- First Published :

