இந்திய வம்சாவளியான ஷிவானி ராஜா பிரிட்டனில் பகவத் கீதை மீது சத்தியப் பிரமாணம் செய்தார்.
37 ஆண்டுகளாக, 1987 முதல் தொழிற்கட்சி ஆட்சி வகித்து வந்த பிரிட்டனின் லெய்செஸ்டர் கிழக்குத் தொகுதியில். முதல்முறையாக கன்சா்வேட்டிவ் கட்சியின் இந்திய வம்சாவளியான ஷிவானி ராஜா வெற்றி பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, ஷிவானி ராஜா கடந்த புதன்கிழமையில் (ஜூலை 10) பிரிட்டன் மக்களவையில் பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பின் போது, ஷிவானி ராஜா இந்திய இதிகாசமான `பகவத் கீதை’யை வைத்து சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
It was an honour to be sworn into Parliament today to represent Leicester East.
I was truly proud to swear my allegiance to His Majesty King Charles on the Gita.#LeicesterEast pic.twitter.com/l7hogSSE2C
— Shivani Raja MP (@ShivaniRaja_LE) July 10, 2024
பிரிட்டன் பொதுத்தோ்தலில் கியொ் ஸ்டார்மா் தலைமையிலான தொழிலாளா் கட்சி, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த பிரதமா் ரிஷி சுனக் தலைமையிலான கன்சா்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து மாபெரும் வெற்றியைப் பெற்றது.