அண்ணாமலை பேட்டி
சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நான் அரசியலுக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் யார் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர்ந்ததில்லை. ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு எல்லையை மீறி சென்றுவிட்டது. சீனியரான மனிதர் ஒருவர், திராவிட முன்னேற்ற காலம் முடிவிட்டது என்பதை தெரிந்துவிட்ட காரணமாக, அவருடைய வாயில் இந்த பேச்சுக்கள் வர ஆரம்பித்து விட்டது. ஆர்.எஸ்.பாரதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என நீதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.
