Tuesday, November 3, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

எல்லோருக்கும் பயம்..செந்தில் பாலாஜி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யட்டும்..எடப்பாடி பழனிச்சாமி

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 14, 2023
in அரசியல் செய்திகள்
0
எல்லோருக்கும் பயம்..செந்தில் பாலாஜி தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்யட்டும்..எடப்பாடி பழனிச்சாமி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chennai oi-Jeyalakshmi C
Updated: Wednesday, June 14, 2023, 13:40 [IST]
சென்னை: செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை தனது கடமையை செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். செந்தில் பாலாஜி யாரை பாதுகாக்க இப்படி நாடகம் போடுகிறார் ஆர்பாட்டம் நடத்துகிறார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது பணி நியமனத்திற்காக பணம் வாங்கினார் என்பது செந்தில் பாலாஜி மீதான புகார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவினை அடுத்து செந்தில் பாலாஜி தொடர்புடைய அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனையடுத்து நள்ளிரவில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்படவே ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் உள்ளிட்ட பலரும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருப்பதால் பயத்தில் இருப்பதாக கூறியுள்ளார். இது புது வழக்கு அல்ல பழைய வழக்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படியே அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார். உரிமம் இல்லாத பார்கள் மூலம் பல கோடி ரூபாய் பணம் கொள்ளையடித்து முறைகேடு நடந்துள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளார். அந்த ஆதாரத்தின் அடிப்படையில்தான் சோதனை நடத்தியுள்ளனர். எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின் என்றும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார். வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும் போது அவர் ஒரு பெண் அதிகாரி என்றும் கூட பார்க்காமல் தாக்குதல் நடத்தினர். இது இந்தியாவிலேயே எங்கும் நடைபெறாது. நேற்றைய தினம் வாக்கிங் போனவர் நன்றாகத்தான் இருந்தார். விசாரணையை முழுமையாக சந்திப்பேன் என்று சொன்னார். அதை விட்டு விட்டு ஏன் இத்தனை ஆர்பாட்டம் செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார். அடுத்த சிக்கல்! செந்தில் பாலாஜியின் தம்பி அலுவலகத்துக்கு சீல்! அமலாக்கத்துறை நோட்டீசால் இறுகும்பிடி செந்தில் பாலாஜி மீதுள்ள அக்கறையில் போய் யாரும் பார்க்கவில்லை. அவர் எதையாவது சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் போய் பார்த்திருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். செந்தில் பாலாஜி நாடகம் நடத்தினாலும் அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தார்மீக பொறுப்பேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
Edappadi Palanisamy said that the enforcement department has done its duty in the Senthil Balaji case. Edappadi Palanichamy also said that the action was taken based on the order of the Supreme Court. Edappadi Palanichamy has also questioned who Senthil Balaji is staging such a drama and protesting to protect.

.

Previous Post

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை: 3 முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்புள்ளதாக அறிக்கை

Next Post

கோவை | கல்விக் கட்டணம் செலுத்த நகை பறித்தவர் கைது

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
கோவை | கல்விக் கட்டணம் செலுத்த நகை பறித்தவர் கைது

கோவை | கல்விக் கட்டணம் செலுத்த நகை பறித்தவர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In