நீட் தேர்வுக்கான பேப்பர் லீக் ஆனதாக பீகார் போலீசார் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்டதில் இது தெரிய வந்ததாக பீகார் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். குஜராத்திலும் பேப்பர் லீக் ஆனதாக மாணவர்கள் கூறியுள்ளனர். சத்திஸ்கர், ஒரிசா மாநிலங்களிலிருந்து மாணவர்கள் குஜராத் சென்டரில் தேர்வு எழுதி 720/720 மதிப்பெண் வாங்கியுள்ளனர். இவை அனைத்தும் பேப்பர் லீக் ஆனதை உறுதிபடுத்துகின்றன.
நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. ஊழல் நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நீட் ஊழல் வியாபம் 2.0 என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெற்றால்தான் 24 லட்சம் மாணவர்களில் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

