Sunday, November 15, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ரஷ்யாவால் போரில் பலவந்தமாக போர்வீரர்களாக ஈடுபடுத்தப்பட்ட 4 இந்தியர்கள் பலி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 12, 2024
in Default
2
ரஷ்யாவால் போரில் பலவந்தமாக போர்வீரர்களாக ஈடுபடுத்தப்பட்ட 4 இந்தியர்கள் பலி!
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ரஷ்யா – உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் பலவந்தமாக சேர்க்கப்பட்ட இந்திய சுற்றுலா பயணிகள் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தப் பேரில் இதுவரை உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் போர் நிகழ்ந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் தற்போது வரை போர் நீடித்து வருகிறது.

இதில், ரஷ்ய ராணுவத்துக்கு பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் ஆள் சேர்ப்பு செய்யப்பட்டு, அவர்களும் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் இந்தியாவிலிருந்து ரஷ்யாவில் வேலை என தவறான விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, அதற்காக நாடுபவர்களை ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று, அங்கு சென்றதும் உக்ரைனுடான போரில் ஈடுபட ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

"We regret to state that two Indian nationals who had been recruited by the Russian Army have recently been killed in the ongoing conflict between Russia and Ukraine. We offer our deepest condolences to the families of the deceased. Our Embassy in Moscow has pressed the Russian… pic.twitter.com/kO8YP25SvW

— Press Trust of India (@PTI_News) June 11, 2024

இந்த விவகாரம் தெரியவந்ததுமே மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம், அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகத்தை தொடர்புகொண்டு போரில் ஈபடுத்தப்பட்ட இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கை மேற்கொண்டது.

மேலும், ரஷ்யாவில் வேலை என கூறப்படும் தகவல்களில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ரஷ்ய ராணுவத்தில் பாதுகாப்பு உதவியாளர்களாக சுமார் 200 இந்தியர்கள் பணியமர்த்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசின் நடவடிக்கையின்பேரில் இவர்களில் 10 இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சூழலில் ரஷ்ய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியர்களில் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

ரஷ்ய ராணுவ வீரர்கள்

ரஷ்ய ராணுவ வீரர்கள்

இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், “இந்த விஷயத்தை இந்தியா தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. ரஷ்ய ராணுவத்தில் புதிதாக இந்தியர்களை சேர்ப்பதை நிறுத்தவும், ராணுவத்தில் சேர்க்கப்பட்ட அனைத்து இந்திய பிரஜைகளையும் விரைவில் திருப்பி அனுப்ப வேண்டும் எனவும் அந்நாட்டிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரியில் குஜராத் மாநிலம், சூரத்தைச் சேர்ந்த ஹேமல் அஸ்வின் பாய் மங்குவா (23), ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பான் (30) என்பவரும் ரஷ்ய ராணுவத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

NEET தேர்வில் குற்றம் சாட்டப்பட்டவரே NEET தேர்வின் முறைகேட்டை விசாரிக்கும் அவலம்…!

Next Post

ஸ்வீட் கடைக்குள் விட்டு சொருகிய அரசுப் பேருந்து..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஸ்வீட் கடைக்குள் விட்டு சொருகிய அரசுப் பேருந்து..

ஸ்வீட் கடைக்குள் விட்டு சொருகிய அரசுப் பேருந்து..

Comments 2

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply
  2. செந்தில்குமார் அமைந்தகரை சென்னை says:
    2 years ago

    நம் ராணுவம் இந்திய ராணுவம் ரஷ்யாவிற்கு கடமைப்பட்டுள்ளது என்பதையும் மறந்து விடக்கூடாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In