டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களின் இலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.,
மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சராக 3வது முறையாக நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை போக்குவரத்துறை இணை அமைச்சர்களாக ஹர்ஷ் மல்ஹோத்ரா, அஜய் தம்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜெய்சங்கருக்கு மீண்டும் வெளியுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அஷ்வினி வைஷ்ணவ்விற்கு மிண்டும் ரயில்வே துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ராஜ்நாத் சிங்கிற்கு மீண்டும் பாதுகாப்புத்துறையை பிரதமர் நரேந்தி மோடி ஒதுக்கியுள்ளார்.
.
