PM Modi Oath Ceremony – மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளும் வெளிநாட்டுத் தலைவர்களின் லிஸ்ட்!
மூன்றாவது முறை பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் மோடியின் பதவியேற்பு விழா, இன்று இரவு 7:15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் நடக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்ளுமாறு அண்டை நாடுகளின் பல தலைவர்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பை ஏற்று பல தலைவர்கள் இந்தியா வந்திருப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்வதாக உறுதி செய்த தலைவர்கள்!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்சு
சீஷெல்ஸின் துணைத் தலைவர் அகமது அஃபிஃப்
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா
மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத்
நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் ‘பிரசந்தா’
பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே
