மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
18 ஆவது மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மற்றும் புதுவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது. அதன்பின்னர் 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்துள்ளன.
இன்று 7 ஆவது கட்டமாக 57 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
2019 மக்களவை பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 303 இடங்களைக் கைப்பற்றி, பெரும்பான்மையைப் பிடித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதேவேளையில், இந்திய தேசிய காங்கிரசு 52 இடங்களையும், காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 87 இடங்களைக் கைப்பற்றியது. ஏனைய கட்சிகள் 103 இடங்களைக் கைப்பற்றின.
2024 மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் செவ்வாயன்று நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதன் விபரம் பின்வருமாறு-
ஏபிபி மற்றும் சி- வோட்டர்ஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரியவந்துள்ளது.
நியூஸ் 18 நடத்திய கருத்துக் கணிப்பில் தமிழ் நாட்டில் திமுக கூட்டணி 36-39 தொகுதிகளிலும், அதிமுக 0-2 தொகுதிகளிலும், பாஜக கூட்டணி 1-3 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் நவ் மற்றும் – இ.டி.ஜி நடத்திய கருத்துக் கணிப்பில், தேசிய ஜனநாயக கூட்டணி 386 தொகுதிகளிலும், INDI கூட்டணி 118 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரிபப்ளிக் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 359 இடங்களிலும், I.N.D.I.A கூட்டணி 154 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளது.
NDTV கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 371 தொகுதிகளையும், I.N.D.I.A கூட்டணி 125 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது. நியூஸ் எக்ஸ், இந்தியா நியூஸ் செய்தி நிறுவனங்களும் இதே இடங்களை குறிப்பிட்டுள்ளன.
.
